ஆலயங்களில் படைக்கும் அதிசய நைவேத்தியம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயங்களில் படைக்கும் அதிசய நைவேத்தியம் பற்றிய பதிவுகள் :

திருவாரூர் தியாகேசப் பெருமானுக்குத் தூதுவளைக் கீரையும் பாகற்காயும் நைவேத்தியமாகப் படைக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.

• திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் முழுநிலவு நாளன்று அன்னாபிஷேகத்துடன் பால், மாங்காய் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

• கேரளா திருமாந்தங்குன்று பகவதி கோயிலில் தேங்காய், அரிசி, சர்க்கரை, வாழைப்பழம் சேர்த்து தயாரிக்கப்படும் சதசதம் என்ற பாயசம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

* திருவாரூர் தியாகராஜ பெருமானுக்கு தினமும் அர்த்த சாம பூஜையின்போது தேன்குழல், நெய் முறுக்கு செய்து வைத்து நைவேத்தியம் செய்கின்றனர்.

* கேரள மாநிலம், கொட்டாரக்கரா தலத்திலுள்ள விநாயகருக்கு "நெய்யப்ப கணபதி' என்று திருநாமம். இத்தல விநாயகரை வேண்டி நெய் அப்பம் செய்து வைத்து நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top