பிரதோஷ நாளில் சிவ வழிபாடுதான் முக்கியத்துவம் பெறும். ஆனால் இந்நாளில் மஹாவிஷ்ணு வழிபாடும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக நரசிம்மர் அவதார காலமாக கூறப்படுகிறது. இதனால் பிரதோஷ காலம் சிவபெருமானுக்கும் பெருமாளுக்கும் உரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்த விளக்கங்கள் மஹா முனிவர் பிரகலாதன் வாழ்க்கை வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. ( நரசிம்மர் அவதாரம் )
செவ்வாய்க்கிழமை கடனை தீர்ப்பதற்கு உகந்த நாள் என்பதால் இன்று மாலை, சிவ வழிபாட்டையும், நரசிம்மர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.
அருகில் இருக்கும் சிவ மற்றும் பெருமாள் கோவிலுக்கு சென்று மனதார நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜையறையில் சாயங்காலம் 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஹரிஹரனை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கடன் சுமை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
கடன் சுமை அல்லாது, குடும்பத்தில் இருக்கும் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அதை சொல்லியும் பிரார்த்தனை செய்யலாம்.
பிறகு ஏதாவது ஒரு நெய்வேதியம் அல்லது நீர் மோர் பானகம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இன்று நரசிம்ம வழிபாடு மிக முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் கொடுக்கப்பட்டுள்ள நரசிம்மர் மந்திரத்தை மனதிற்குள் பிரார்த்தித்து வழிபடலாம்.
நரசிம்மர் மந்திரம்
ஓம் நமோ நாரஸிம்ஹாய
வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
வஜ்ர தேஹாய வஜ்ராய
நமோ வஜ்ர நகாய ச
நரசிம்மரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து இன்றைய தினம் பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு.