நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை 7 வயது குழந்தையாக பாவித்து வழிபடுவது வழக்கம். ஆறாம் நாளுக்குரிய தேவியான சண்டிகா தேவி குழந்தை வடிவானவள் என சொல்லப்படுகிறது.
அதனால் நவராத்திரியின் 6ம் நாள் கன்னிகா பூஜை செய்வதற்கான மிகச் சிறந்த நாளாகும். 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களை அம்பாளாக பாவித்து, அவர்களுக்கு நழுங்கிட்டு, பாத பூஜை செய்து, அவர்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கி, பிரியமான இனிப்புகள், உடைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
இப்படி செய்வதால் இந்த குழந்தைகளின் யாராவது ஒருவரின் வடிவில் வந்து அம்பிகை நம்முடைய பூஜையை ஏற்று நமக்கு அனைத்து நலன்களையும் வழங்குவாள் என்பது நம்பிக்கை.
அம்பிகையின் வடிவம் - சண்டிகா தேவி
கோலம் - தேவியின் நாமம் கோலம் (கடலை மாவு கோலம்)
மலர் - செம்பருத்தி
இலை - சந்தன இலை
நைவேத்தியம் - தேங்காய் சாதம்
சுண்டல் - பச்சைப் பயிறு சுண்டல்
பழம் - நார்த்தம்/ ஆரஞ்சு
நிறம் - கிளிப்பச்சை
ராகம் - நீலாம்பரி
நவதுர்கை வழிபாடு
அம்பிகையின் வடிவம் - காத்யாயனி
மலர் - சிவப்பு நிற மலர்கள்
நைவேத்தியம் - கிச்சடி
படைக்க வேண்டிய பொருட்கள் - குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு
பலன்கள் - திருமணம், வேலை, உயர் பதவி, வெளிநாடு வேலை வாய்ப்பு அளிப்பவள்.
வழக்குகளில் வெற்றியை அளிப்பதுடன், பல ஜென்ம பாவங்கள், பாவங்களை நீக்குவாள். திருமணம் ஆகாத பெண்கள், திருமண வாழ்க்கை சரியாக அமையாத பெண்கள் இந்த அம்பிகையை வழிபட்டால் மங்களகரமான வாழ்க்கை அமையும்.