நவராத்திரி ஆறாம் நாள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவராத்திரி ஆறாம் நாள் பற்றிய பதிவுகள் :

நவராத்திரியின் ஐந்தாவது நாளில் அம்பிகையை தாயாக வழிபடுவதை போல், நவராத்திரியின் 6வது நாளில் அம்பிகையை சிறிய பெண் குழந்தையின் வடிவமாக வழிபட வேண்டும். 

இது அம்பிகையை நம்முடைய வீட்டை தேடி வரவைக்கும் அற்புமான வழிபாடாகும். அதே போல் அனைதஅது விதமான செல்வங்களையும் பெறுவதற்கான நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது.

நவராத்திரி விழாவில் மகாலட்சுமியை வழிபடுவதற்குரிய நிறைவு நாளே நவராத்திரியின் 6ம் நாளாகும். இதைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்களும் ஞானத்தை அருளும் சரஸ்வதி தேவிக்குரிய வழிபாட்டு நாட்களாகும். 

அதனால் நவராத்திரியின் 6ம் நாள் என்பது மகாலட்சுமியிடம், நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் வேண்டி பெறுவதற்குரிய மிக முக்கியமான நாளாகும். 

நவராத்திரியின் 6ம் நாள் வழிபாடு என்பது எப்போதும் தனித்துவமான, விசேஷ பலனை தரக் கூடிய நாளாகும். அதிலும் இந்த ஆண்டு நவராத்திரியின் 6ம் நாள் என்பது கூடுதல் சிறப்புடைய நாளாகும்.

இந்த ஆண்டு நவராத்திரியின் 6ம் நாள் அக்டோபர் 08ம் தேதி வருகிறது. பொதுவாக ஆறு என்பது ஆறுமுகக் கடவுளான முருகப் பெருமானுக்குரிய விசேஷமான எண்ணாகும். 

அதிலும் இந்த ஆண்டின் நவராத்திரியின் 6ம் நாள் முருகப் பெருமானின் வழிபாட்டிற்குரிய செவ்வாய் கிழமையும், வளர்பிறை சஷ்டியும் இணைந்து வரும் நாள் அமைக்கிறது. இது மேலும் விசேஷமான ஒன்றாகும். 

முருகப் பெருமான், ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து நலன்களையும் வழங்கக் கூடியவர். அடியார்களின் துன்பத்தை போக்க ஓடோடி வரக் கூடியவர். 

செவ்வாய் கிழமை என்பது பக்தர்களின் துன்பங்கள் தீர்க்கும் துர்க்கைக்கும் உரிய நாளாகும். இது மகாலட்சுமிக்கும் உரிய மங்கள நாளாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top