பித்ரு தோஷம் நீங்கும் தை அமாவாசை

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பித்ரு தோஷம் நீங்கும் தை அமாவாசை பற்றிய பதிவுகள் :

ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவை மிகுந்த சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. தை மாதம் என்பது தேவர்களுக்கான விடியற்காலை நேரம். இதன் காரணமாக முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நேரமாக இது கருதப்படுகிறது.

ஒரு ஆன்மா அடுத்த பிறவி எடுக்கும் வரை அவர்களின் சந்ததியினர் செய்யக் கூடிய வழிபாடுகள் அனைத்தும் பலனாக கிடைக்கிறது. தர்ப்பணம் என்பது இறந்த ஆன்மாக்கள் எல்லோருக்குமே கொடுக்கலாம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா மற்றும் நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்த குரு மற்றும் அவரது மனைவி, நண்பன், மற்றும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் அனைத்து ஜீவராசிகளும் மோட்சம் அடைய தர்ப்பணம் செய்யலாம்.

தர்ப்பணம் செய்வதால் இறந்த ஆன்மாக்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் அடையும்போது நம் சந்ததியினர் அனைவருமே சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த தர்ப்பணத்தை கோவில், குளத்தங்கரை, ஆற்றங்கரையோரம், அல்லது வீட்டில் செய்யலாம்.

குறிப்பாக அன்றைய தினம் வீட்டில் முழுக்க முழுக்க சைவ சமையல் மட்டுமே இடம் பெற வேண்டும். காய்கறிகள், பொரியல், அவியல் என அனைத்தும் சமைத்து இறந்த பித்ருக்களுக்கு படையலிட்டு ஒரு சொட்டு நெய் விட்டு தீபாராதனை காட்ட வேண்டும். அதன் பிறகு அந்த உணவை காகம் அல்லது பசுமாட்டிற்கு படைத்து அதன் பிறகு வீட்டில் உள்ளவர்கள் உணவருந்த வேண்டும். மேலும் அந்த உணவை ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும்போது நீண்ட நாட்களாக இருந்த திருமணத் தடை, குழந்தை பாக்கியம் என அனைத்தும் நீங்கி குறிப்பாக பித்ரு தோஷம் நீங்கி அவர்கள் மோட்சம் அடைந்து நமக்கு நன்மையை செய்வார்கள் என்பது ஐதீகம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top